basil
செய்திகள்இலங்கை

அஜித் நிவாட் கப்ராலின் பொறுப்புக்கள் பஸிலிடம்! – வெளியானது அதிவிசேட வர்த்தமானி

Share

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலின் கீழிருந்த பொறுப்புக்கள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்சவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலின், இராஜாங்க அமைச்சின் கீழிருந்த நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்புப் பணிகள் மற்றும் பொறுப்புக்களை நிதியமைச்சர் பஸில் ராஜபக்சவின் கீழ் கொண்டு வருவதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த அஜித்  நிவாட் கப்ரால் அண்மையில் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து அவர் விலகிய பின்னர் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையிலேயே இராஜாங்க அமைச்சின் செயற்பாடுகள், பொறுப்புக்கள், முன்னுரிமை, குறித்த நிறுவன மற்றும் சட்ட கட்டமைப்பு ஆகியவற்றை நிதியமைச்சின் கீழ் கொண்டுவரும் வகையில் அதிவிசேட வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...