3e4 2
செய்திகள்இலங்கை

விவசாயக் கொள்கை அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிப்பு!

Share

தேசிய விவசாயக் கொள்கை அறிக்கையை அடுத்தவாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் ஆலோசனைக்கு அமைவாக, முதன் முறையாக தொகுக்கப்பட்டுள்ள தேசிய விவசாயக் கொள்கை அறிக்கை, அடுத்தவாரம் அமைச்சரவையின் அங்கிகாரத்துக்காக சமர்பிக்கப்படவுள்ளதாக, விவசாய அமைச்சின் ஊடகப்பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தேசிய விவசாய கொள்கையை வகுப்பதற்கான குழுவினால் தயாரிக்கப்பட்ட விவசாயக் கொள்கையின் சிங்கள, ஆங்கில பிரதிகள், விவசாய அமைச்சருக்கு நேற்று வழங்கப்பட்டன.

இதன்போது கருத்துரைத்த விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே,

‘தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்துக்குள், தேசிய விவசாயக் கொள்கை தயாரிக்கப்பட்டமை நினைத்து மகிழ்வடைகிறேன்.

இறக்குமதி பொருளாதாரத்துக்குப் பதிலாக உற்பத்தி பொருளாதாரத்தை நோக்கி நாட்டை வழிநடத்துவதில் விவசாய அமைச்சர் என்ற முறையில் எனக்கு அதிக பங்கு உண்டு.

தேசிய விவசாயக்கொள்கையானது, இலங்கை மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கான உரிமையை உறுதிசெய்யும். அத்துடன், நச்சுத் தன்மையற்ற உணவு உண்ணும் முறைமைக்கு வழிகாட்டும்.

விவசாய உற்பத்தி மற்றும் மூலப்பொருள் உற்பத்தி மூலம், கிராம அளவில் சுயதொழில்களை வலுப்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தும்’ குறிப்பிட்டார்.

இதேவேளை, தேசிய விவசாய கொள்கையின் மூலம், இலங்கையை நிலைபேறான பசுமையான வலயமாக மாற்றி அமைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு, மக்களும் ஒத்துழைப்பு வழங்கி செயற்பட முடியும்’ என்று, விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68f34f316f8d5
செய்திகள்இலங்கை

மண்ணில் புதைக்கப்பட்ட இஷாரா செவ்வந்தியின் கைப்பேசி மீட்பு: விசாரணையில் மேலும் பலர் சிக்குவார்கள்!

‘கணேமுல்ல சஞ்ஜீவ’ என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரின் கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா...

25 68f0b45097e66
செய்திகள்இந்தியாஉலகம்

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்யாது: ட்ரம்ப் தகவல்

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்யாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும்...

image c348b91fcc
செய்திகள்இலங்கை

அடுத்த கல்வியாண்டு முதல் பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக சுய கற்றல் கையேடுகள்

அடுத்த கல்வியாண்டில் இருந்து, தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது என்று...

25 68f3476a27f6c
செய்திகள்உலகம்

பொதுஜன பெரமுன வேட்பாளர்களிடம் இருந்து பொலிஸ் அறிக்கை கட்டாயம்: நாமல் ராஜபக்ச

எதிர்காலத் தேர்தல்களில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்களிடம் இருந்து பொலிஸ் அறிக்கை பெறப்படும் என்று கட்சியின் தேசிய...