LK94008324 02 E
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

கட்டுவன்- மயிலிட்டி வீதியை விடுவிக்க நடவடிக்கை

Share

இராணுவக்கட்டுப்பாட்டில் நீண்டகாலமாக இருந்த யாழ். சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் பாதையான கட்டுவன்- மயிலிட்டி வீதியின் 400மீற்றர் தூரத்தை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வருட இறுதிப்பகுதியில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனை சபைக் கூட்டத்தில் இதுதொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது.

அதற்கமைய உயர்பாதுகாப்பு வலயமாக உள்ள 400 மீற்றர் பகுதியின் முட்கம்பி வேலிகள் இராணுவத்தினரால்  பின்நகர்த்தப்பட்டு  400 மீற்றர்  பகுதியை கட்டுவன்-மயிலிட்டி வீதியுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் தற்சமயம்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி வீதியின் கிழக்கு பக்கமாக உள்ள இராணுவ உயர் பாதுகாப்பு வலய முட்கம்பி வேலிகள் அகற்றப்படுகின்றன.

தேசிய பாதுகாப்பு நிலைமைகளை ஆராய்ந்து ஆறு மீற்றர் தூரம் பாதுகாப்பு வேலிகளை நகர்த்தி 400மீற்றர் நீளமான பகுதி வீதி அபிவிருத்தி அதிகார சபையினரிடம் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
04 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க விசேட பொறிமுறை: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு உரை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விநியோகத் தடைகளை எதிர்கொள்ள இலங்கை...

03 18
செய்திகள்உலகம்

‘சேவ் அமெரிக்கா’ சட்டமூலம்: ஆதரவளிக்காத செனட்டர்களுக்கு டொனால்டு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் தீர்மானமிக்க சட்டமூலமாக அமையவுள்ள ‘சேவ் அமெரிக்கா’ (Save America Act) சட்டமூலத்திற்கு...

02 17
செய்திகள்உலகம்

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் இராஜினாமா: ஈரான் போர் குறித்து ட்ரம்பிற்குப் பகிரங்க எச்சரிக்கை

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ள ஜோசப் கென்ட்,...

01 17
செய்திகள்விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னாள் வீரர்களைக் கௌரவிக்கின்றது: ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சியுடன் ஒன்றுகூடல்

இந்தியப் பிரீமியர் லீக் (IPL) 2026 தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)...