நுவரெலியா தலவாக்கலை பகுதியில் வேன் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானது.
குறித்த சம்பவம் தலவாக்கலை ராணிவத்தை பிரதான வீதியில் மெல்டன் தோட்ட பகுதியில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தின் போது வேனில் சாரதி மட்டுமே இருந்துள்ளதாகவும் சாரதி காயங்களின்றி உயிர்தப்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கத்தால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
#SriLankaNews
Leave a comment