corona 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொரோனாவால் வடக்கில் 71 பேர் உயிரிழப்பு!

Share

கடந்த ஒக்ரோபர் மாதத்தில் மாத்திரம் வடக்கு மாகாணத்தில்  2 ஆயிரத்து 612 பேர் கொவிட்-19 நோய்த்தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதேவேளை 71 பேர்  உயிரிழந்துள்ளனர்.

இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 44 பேரும், வவுனியா மாவட்டத்தில் 14 பேரும்  உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு மாகாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 74 பேர் கொவிட்- 19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 865 பேரும், வவுனியா மாவட்டத்தில் 703 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 654 பேரும், மன்னார் மாவட்டத்தில் 273 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 117 பேரும் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 44 பேரும், வவுனியா மாவட்டத்தில் 14 பேரும்,  கிளிநொச்சி மாவட்டத்தில் 9 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 பேரும் உட்பட 71 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் நேற்று வரையான காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 833 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...