இந்தியா – தமிழக அகதிகள் முகாமில் தங்கி இருந்த இலங்கைத் தமிழர்கள் 65 பேர் மாயமான நிலையில், படகில் கனடா நாட்டிற்குத் தப்பிச்சென்றார்களா என்பது தொடர்பில் கியூ பிரிவு பொலிஸார் விசாரணையினை மேற்கொண்டுள்ளனர்.
இந்தியா – தமிழகத்தில் உள்ள பல்வேறு அகதிகள் முகாம்களில் தங்கி இருந்த 65 பேரை கடந்த செப்டம்பர் மாதம் முதல் காணவில்லை.
இது தொடர்பாக கியூ பிரிவு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதில் இலங்கை அகதிகள் 65 பேரும் கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து ஒரு விசைப்படகில் ஏறி தப்பிச்சென்றதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், அவர்கள் அனைவரும் கனடா நாட்டுக்குச் செல்லும் நோக்கத்துடன் படகில் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை குறித்த இலங்கைத் தமிழர்கள் 65 பேரும் அமெரிக்க இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தீவில் சிக்கித் தவிப்பதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான மேலதிகத் தகவல்களை கியூ பிரிவு பொலிஸார் சேகரித்து வரும் அதேவேளை, இதற்காக இன்டர்போல் உதவியும் நாடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Leave a comment