Corona – முல்லையில் நேற்று மட்டும் 54 தொற்றாளர்கள்!!
முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று (24) மட்டும் 54 கொரோனாத் (corona) தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 9 பேரும், புதுக்குடியிருப்பில் 24 பேரும், முள்ளியவளையில் 6 பேரும், முல்லைத்தீவில் 3 பேரும்,மாங்குளம் பிரதேசத்தில் 5 பேரும் மல்லாவி பிரதேசத்தில் 7 பேரும் உட்பட 54 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இதேவேளை, நேற்று (24) புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள வர்த்தகரான 47 அகவையுடைய சிவப்பிரகாசம் சிறிதரன் என்பவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்திலும் தோற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அத்துடன் தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment