நாட்டில் கடந்த ஒன்பது நாட்களில் மதுபான விற்பனை மூலம் 5 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனை மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜி.குணசிறி தெரிவித்துள்ளார்.
கடந்த செப்ரெம்பர் 21ஆம் திகதி செப்ரெம்பர் 30 ஆம் திகதி வரையிலான 9 நாட்களில் மதுபான விற்பனையால் 5 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு கிடைக்கப்பெற்ற வருமானம் உள்நாட்டு மதுபான உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மதுபான விற்பனையால் ஈட்டப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட காரணத்தால் மூடப்பட்டிருந்த மதுபானசாலைகள் கடந்த செப்ரெம்பர் 21 ஆம் திகதி மீளத் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
Leave a comment