பருத்தித்துறை, மந்திகை ஆதார மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவுக்கு நேற்று வந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜென் பரிசோதனையில் 30 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுமார் 40 பேருக்கு அன்ரிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்றும், அவர்களில் 30 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியவர்கள், இடைத்தங்கல் முகாமுக்கு அனுப்பட்டவர்கள், வீடுகளில் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள் என்று வகைப் பிரிக்கப்பட்டு உரிய இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
Leave a comment