whatsapp 2
செய்திகள்உலகம்தொழில்நுட்பம்

தனியுரிமை மீறல்! – ‘வட்ஸ் அப்’க்கு 225 மில். யூரோ தண்டம்!

Share

தனியுரிமை மீறல்! – ‘வட்ஸ் அப்’க்கு 225 மில். யூரோ தண்டம்!

.தனியுரிமை விதிகளை மீறியது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ‘வட்ஸ் அப்’ நிறுவனத்துக்கு அயர்லாந்து, 225 மில்லியன் யூரோ தண்டம் விதித்துள்ளது.

இது இலங்கை மதிப்பில் சுமார் 4,500 கோடி ரூபா அபராதமாகும்,

தகவல் பரிமாற்ற செயலிகளில் முன்னணியில் இருக்கும் ‘வட்ஸ் அப்’ நிறுவனத்தை கடந்த 2014 ஆம் ஆண்டில் பேஸ்புக் நிறுவனம் கையகப்படுத்தியது.

இந்நிலையில், ‘வட்ஸ் அப்’ செயலி தனது பயனர்களின் விவரங்களை பேஸ்புக் நிறுவனத்தின் பிற செயலிகளுடன் பகிர்ந்துகொள்கிறது என குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு ‘வட்ஸ் அப்’ நிறுவனத்துக்கு 50 மில்லியன் யூரோ அபராதமும் விதிக்கப்பட்டது.

எனினும் இந்த அபராதம் மிகவும் குறைவாக உள்ளது என ஐரோப்பிய ஒழுங்குமுறையாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அயர்லாந்து நாட்டின் தகவல் பாதுகாப்பு ஆணையம் (டி.பி.சி) இந்த அபராதத் தொகையை அதிகரித்துள்ளது.

பல காரணிகளின் அடிப்படையில் அதன் முன்மொழியப்பட்ட அபராதத்தை மறுபரிசீலனை செய்ய மற்றும் அதிகரிக்கும்படி அயர்லாந்திடம் கேட்கப்பட்டது எனவும், அதன் அடிப்படையில் 225 மில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது எனவும் டி.பி.சி. தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த அபராதத் தொகை மிகவும் அதிகமானது என்றும், இதனை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்போவதாகவும் ‘வட்ஸ் அப்’ நிறுவனம் அறிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
உலகம்செய்திகள்

ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் கனடா நினைவுத்தூபி : நிமால் விநாயகமூர்த்தி

தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி (Tamil Genocide Monument) ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை...

19 18
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12 ஆம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. குறித்த...

18 17
இலங்கைசெய்திகள்

தலைவரின் மகன் பாலசந்திரன் இன்றும் வாழ்கின்றான் – ஜக்மோகன் சிங் உருக்கம்

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற...

17 17
உலகம்செய்திகள்

முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்த தவெக தலைவர் விஜய்

நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் இருப்போம் என முள்ளிவாய்க்கால் தினத்தன்று உறுதி ஏற்பதாக தமிழக...