நாட்டில் கொரோனாத் தொற்றுக்கு இலக்காகி நேற்றையதினம் மேலும் 216 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 115 ஆண்களும் 101 பெண்களும் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 60 வயதுக்கு மேற்பட்ட 170 பேர் உயிரிழந்துள்ளனர். தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 41 பேர் மரணித்துள்ளனர். 30 வயதுக்கு கீழ்பட்டோரில் ஐவரும் மரணித்துள்ளனர்.
இதன் அடிப்படையில், நாட்டில் கொரோனாத் தொற்றுக்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 991 ஆக உயர்வடைந்துள்ளது.
Leave a comment