இந்தியா
விமானம் தாங்கி போர்க்கப்பலில் திடீர் தீ!


இந்திய கடற்படைக்குச் சொந்தமான விமானம் தாங்கி போர்க்கப்பலில் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்திய கடற்படைக்குச் சொந்தமான விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா கா்நாடக மாநிலம் கர்வாா் துறைமுகப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த கப்பலில் கடற்படை வீரர்கள் தங்கும் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதை கவனித்த கப்பலில் இருந்த வீரர்கள் உடனடியாக தீயை அணைத்தனர்.
இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விபத்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை என கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீ விபத்து குறித்து விசாரணை நடத்த விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.