இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறது.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந்தேதி முதல் ஓகஸ்ட் 10- ஆம் திகதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடக்கிறது.
வரலாற்று சிறப்புமிக்க இந்தப் போட்டியில் 180-க்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து 2.500 வீர, வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
சர்வதேச செஸ் கூட்டமைப்பு, இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழக அரசு இணைந்து இந்தப் போட்டியை நடத்துகிறது.
இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் விளம்பர பட ஷூட்டிங் சென்னை நேப்பியர் பாலத்தில் இன்று நடந்தது. காலை 8 மணியில் இருந்து 9 மணி வரை நடந்த இந்த விளம்பர பட ஷூட்டிங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
#IndiaNews
Leave a comment