20220315 111703 scaled
செய்திகள்இலங்கை

இடமாற்றங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்! – இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தெரிவிப்பு

Share

ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில் மீண்டும் தொழிற்சங்க போராட்டத்தை நடத்துவோமென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் .

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இடமாற்றம் தொடர்பாக தொழிற்ச்சங்க சபையினால் எடுக்கப்படும் தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளாது, வடமாகாண கல்விப்பணிப்பாளர் தன்னிச்சையாக செயற்பட்டு வருகின்றார். இதன் மூலமே கல்வித்துறைக்கு மிக நெருக்கடியான சூழ்நிலை உருவாகி இருக்கின்றது.

எதிர்வரும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் இந்த இடம்மாற்றங்கள் அதாவது வெளிமாவட்ட ஆசிரியர்களின் சேவையின் அடிப்படையில் இடமாற்றம் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.இல்லையென்றால் கல்வி அமைச்சின் அலுவலகத்தையும், ஆளுநர் செயலகத்தையும் முடக்குவோம்.

அரசியல் செல்வாக்கு காரணமாக சில ஆசியர்கள் இந்த இடம்மாற்றத்துக்கு உள்வாங்கப்படவில்லை. அதாவது அவர்களுக்கு வசதியான இடத்தில் நியமனங்களைப் பெற்று நீண்ட காலமாக உரிய இடமாற்றம் இல்லாமல் அதே பாடசலையில் சேவை செய்து வருகின்றனர்.

இது தவறு. இடமாற்ற கொள்கை முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x630 1
செய்திகள்இலங்கை

செவ்வந்தியின் கைது தகவலை கசியவிட்ட அரசியல்வாதி!

கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் இஷாரா செவ்வந்தி, கைது செய்யப்பட்ட விடயம் அரசாங்கத்தின் பிரபல அரசியல்வாதி...

11 15
இலங்கைசெய்திகள்

செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச்சென்ற விதம் வெளியானது

கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொல்ல உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து தப்பிச்சென்ற விதம் தொடர்பில்...

10 16
இலங்கைசெய்திகள்

ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவதால், அதிகாரிகள் வரி விதிப்பதும் வசூலிப்பதும்...

9 14
இலங்கைசெய்திகள்

பொன்சேகாவின் கடும் சொற்போர்: பதிலளிக்க மொட்டுக் கட்சி மறுப்பு!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவிக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டியதில்லை. அவர் யாரென்பது மக்களுக்குத்...