கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையில் பேச்சு வார்த்தை இடம்பெற்றுள்ளது.
நேற்று பிற்பகல் டில்லி ஹைதராபாத் மாளிகையிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரு நாட்டுக்கு இடையிலான உறவு வளர்ச்சியின் வேகத்தில் எந்த மாற்றமும் இல்லை. கொவிட் தொற்று சவால்களுக்கு பின்னரும் இரு தரப்பு உறவுகளும் வலுபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நடந்த மாநாட்டில் இரு நாடுகளின் உறவை வலுப்படுத்தும் பாதுகாப்பு, வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்ட துறைகள் சார்ந்தும் பேசப்பட்டது.
அத்தோடு கல்வி, கலாசாரம் மற்றும் விண்வெளி உள்ளிட்ட 10 துறைகளில் ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
#WorldNews