இந்தியாவிற்கு விளாடிமிர் புட்டின் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இந்தியாவுக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
டெல்லியில் இன்று இடம்பெறும் இந்திய – ரஷ்ய உச்சி மாநாட்டில் பங்குபெறுவதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விஜயத்தின்போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல அமைச்சர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.
உச்சி மாநாட்டின் இறுதியில் இரண்டு நாடுகளுக்கும் இடையேயான 10 முக்கிய உடன்படிக்கைகள் பல கைச்சாத்திடப்படும் என இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.
மேலும் இந்த சந்திப்புகளில் பரஸ்பர, பிராந்திய, சர்வதேச அரசியல் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக இந்திய ஊடககங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு நாளை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், ரஷிய அதிபர் விளாடிமிர் புட்டினும் இடையில் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#india
Leave a comment