செய்திகள்
பிரியந்தவின் உடலை எரிப்பதற்கு முன்னர் கை கால்கள் சேதமாக்கப்பட்டுள்ளது!!


பாகிஸ்தானில் உயிரிழந்த இலங்கையரான பிரியந்த குமாரவின் மரணத்தின் பின்னர் இடம்பெற்ற பிரதே பரிசோதனைகள் மூலம் அவர் கொல்லப்பட்டமை தொடர்பான செய்திகள் வெளியாகிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
அவரின் தலைமீது பாரிய தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அவரது உடலை தீயிட்டுக்கொழுத்துவதற்கு முன்னர் அவரது கைகால்களை முற்றாக சேதப்படுத்தியுள்ளனர்.
அவரது தலையில் பல தொடர்ச்சியான தாக்குதல்கள் இடம்பெற்றன எனவும் அவை மூளைவரை சென்றதால் மரணம் நிகழ்ந்தது எனவும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறை கும்பல் அவரது கைகால்களை முற்றாக அடித்துநொருக்கிவிட்டது என பிரேதப் பரிசோதனை அறிக்கையை மேற்கோள்காட்டி சாமா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை அவரது திசுக்களில் 99 வீதமானவை எரிகாயம் மற்றும் காயங்களால் சேதமாகிவிட்டன. காலின் அடிப்பகுதி தவிர உடலின் அனைத்து பாகங்களும் எரிந்துவிட்டன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SrilankaNews