மனிதர்களிடம் இருந்து பரவும் கொரோனா தொற்றானாது விலங்குகளுக்குப் பரவுவதன் மூலம் புதிய கொவிட் திரிபு உருவாகக்கூடும் என ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்க கால்நடை மற்றும் உயிரியல் அறிவியல் நிறுவனம் நடத்திய மேற்படி ஆய்வில், நாய்கள், பூனைகள், எலிகள் மற்றும் வெள்ளெலிகள் போன்ற விலங்குகளுக்கு மனிதர்களிடமிருந்து கொவிட் தொற்று பரவிய சந்தர்ப்பங்கள் தொடர்பில் பகுப்பாய்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, கொவிட் தொற்று உறுதியாகும் மேற்படி விலங்குகளிடமிருந்து புதிய கொவிட் திரிபுகள் தோன்றுவதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் பரவல் வரம்பு அதிகளவில் இருப்பதும் இதற்குக் காரணமாகும்.
பல விலங்குகள் மனிதர்களிடமிருந்து மற்ற உயிரினங்களுக்கு வைரஸை கடத்தும் திறன் கொண்டவை என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
#WorldNews
Leave a comment