Connect with us

செய்திகள்

முல்லையில் கையெழுத்து வேட்டை!

Published

on

Mullai

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகளையும், சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளையும் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண கடற்றொழிலாளர் இணையமும், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் இணைந்து முன்னெடுத்துள்ள இந்திய இழுவைப்படகுகளின் வருகை மற்றும், சட்டவிரோத கடற்றொழில்செயற்பாடுகளுக்கு எதிரான கையெழுத்துவேட்டை முல்லைத்தீவில் நேற்று (03) இடம்பெற்றது.

இதில் பங்கேற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .

அவர் மேலும் கூறுகையில்,

வடமாகாண கடற்றொழிலாளர் இணையமும், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் சேர்ந்து தடைசெய்யப்பட்ட சட்டவிரோதமான கடற்றொழில்களுக்கு எதிராக இந்த கையெழுத்து வேட்டையை நடாத்திக்கொண்டிருக்கின்றார்கள்.

இதிலே ஒரு இலட்சம் கையெழுத்துகளுக்குமேல் வாங்கி, தடைசெய்யப்பட்ட கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை அடக்கவேண்டும் என்ற நோக்கோடு உச்சநீதிமன்னில் வழக்கொன்றைத் தொடர்வதற்காக இந்த கையெழுத்து வேட்டை இடம்பெறுகின்றது.

சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் எங்களுடைய அப்பாவி மீனவர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படுகின்றனர். இம்முறைக்குரிய இறால் பருவகாலம் அண்மித்துள்ள நிலையில், இந்திய இழவைப்படகுகள் மற்றும், தென்னிலங்கை இழுவைப்படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகளால் எமது மீனவர்கள் பாரிய இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர்.

எமது மீனவர்களின் இந்தக் கோரிக்கை வலுப்பெறவேண்டும் எனத் தெரிவித்தார்.

#SrilankaNews

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்1 நாள் ago

இன்றைய ராசி பலன் : 14 பிப்ரவரி 2025 இன்று காதலர் தினம் – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 14.02. 2025, குரோதி வருடம் மாசி மாதம் 2 வெள்ளிக் கிழமை, சந்திரன் சிம்மம் ராசியில் சஞ்சரிக்கிறார். மகரம் ராசியில் திருவோணம், அவிட்டம் நட்சத்திரத்தை...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 13 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 13.02.2025, குரோதி வருடம் மாசி மாதம் 1, வியாழக் கிழமை, சந்திரன் சிம்மம் ராசியில் சஞ்சரிக்கிறார். மகரம் ராசியில் உத்திராடம், திருவோணம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 12 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 12.02.2025, குரோதி வருடம் தை மாதம் 30, புதன் கிழமை, சந்திரன் கடகம் ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் பூராடம், உத்திராடம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 11 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 11 பிப்ரவரி 2025 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 11.02.2025, குரோதி வருடம் தை மாதம் 29, செவ்வாய்க் கிழமை,...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 10 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 10 பிப்ரவரி 2025 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 10.02.2025 குரோதி வருடம் தை மாதம் 28, திங்கட் கிழமை,...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்6 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 09 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 09 பிப்ரவரி 2025 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 9.02.2025, குரோதி வருடம் தை மாதம் 27 ஞாயிற்று கிழமை,...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் : 07 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 7.02. 2025, குரோதி வருடம் தை மாதம் 25 வெள்ளிக் கிழமை, சந்திரன் ரி ஷபம் ராசியில் சஞ்சரிக்கிறார். துலாம் ராசியில் சுவாதி, விசாகம்...