‘ஓரம் கட்டப்படுதல், பாரபட்சம், சுரண்டல் இயல்பிலான வேலை நிலைமைகள் என மிக மோசமான வாழ்க்கை நிலைமைகளை மலையகத் தமிழர்கள் அனுபவிப்பதை நான் நேரடியாக பார்த்தேன்” என ஐ.நா நிபுணர் ஒபோகோட்டா தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவர் இதனை தெரிவித்தார்.
இலங்கையில் 8 நாட்கள் விஜயத்தினை மேற்கொண்டிருந்த இவர், ஒபோகாட்டா அரசாங்க அதிகாரிகள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, சிவில் சமூக அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள், கல்விமான்கள், குடிபெயர் தொழிலாளர்கள் மற்றும் ஊழியச் சுரண்டல்களினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரையும் ஒபோகாட்டா சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை அரசாங்கம் சமகால அடிமை வடிவங்களை குறைப்பதற்கான வலுவான சட்டகத்தை கொண்டுள்ளது.
எனினும் சில பலவந்த ஊழியம் மற்றும் அடிமை சேவகம் என்பவற்றுக்கு இணையாக சாதி அடிப்படையிலான பாரபட்சம், ஊழியச் சுரண்டல் காணப்படுகின்றன.
அதனை தவிர்த்து வெற்றி கொள்வதற்கு பெரும்பாலும் இலங்கை அரசாங்கம் அனைவரையும் உள்வாங்கி அனைத்து துறைகளையும் அரவணைத்து கொள்ளும் ஒரு சமூகமாக உருவாக வேண்டும் என அவர் தெரிவித்தார்.
#SriLankaNews
 
 
 
                     
                             
                                 
				             
				             
				             
				             
 
 
 
 
 
 
 
Leave a comment