செய்திகள்
இன்று உணவகங்களைக் கூட நடத்த முடியாத சூழல்: ஜெயந்திரன்
இன்று அரசாங்கமும், அரசாங்க அதிகாரிகளும் எடுக்கின்றன தவறான முடிவுகளால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துவருகின்றனர்.
இவ்வாறு அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சின் தலைவர் அ.ஜெயந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று (04) யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்;
அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதில் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.
தற்போது உணவகங்கள் நடத்துபவர்களால் கூட உணவகங்களை நடத்த முடியாமல் இன்னல்களை எதிர்கொள்கின்றனர் எனவும் தெரிவித்தார்.