நேற்றையதினம் ஊடகவியலாளர் சுலக்சன் பொலிஸாரால் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான ந.ஸ்ரீகாந்தா தனது கண்டன அறிக்கையில்,
கடந்த 2ம் திகதி பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் ஊடகவியலாளர் ஜெ. சுலக்சன் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் கடுமையான கண்டனத்துக்குரியது.
முறையீடு செய்வதற்கு சென்ற ஒருவருக்கு பொலிஸ் நிலையத்தில் வைத்து துப்பாக்கி முனையில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது மிகவும் பாரதூரமான மனித உரிமை மீறலாகும்.
இச் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணை, பாரபட்சம் இன்றியும் முழுமையாகவும் விரைவாகவும் நடாத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று நாம் கோருகின்றோம்.
யாழ்ப்பாண மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இச் சம்பவம் தொடர்பில் குரல் எழுப்புவதன் ஊடாக தமது கடமையை செய்வார்கள் என எதிர்பார்க்கின்றோம் – என தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment