மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னிட்டு வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரைப் பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொள்ளும் முகமாக சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினர் வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரைப் பகுதிக்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையிலேயே அங்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் இராணுவ வாகனங்கள் மற்றும் புலனாய்வு பிரிவினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
மாவீரர் நாளை முன்னிட்டு யுத்தத்தால் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக சிவாஜிலிங்கம், வட மாகாண சபை முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் உள்ளிட்டோர் வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரைப் பகுதியை நோக்கி நடைப் பயணத்தை ஆரம்பித்து அங்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது அந்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
1 Comment