செய்திகள்
கிண்ணியா விபத்து; மக்கள் போராட்டம்; படையினர் குவிப்பு (Video)
திருகோணமலை – கிண்ணியா பகுதியில் இழுவைப்படகொன்று கவிழ்ந்ததில் 07 பேர் உயிரிழந்தைத் தொடர்ந்து, மக்கள் கடைகளை மூடி துக்க தினமாக அனுஷ்டிகின்றனர்
திருகோணமலை – கிண்ணியா – குறிஞ்சாக்கேணிப் பால நிர்மாண வேலைகள் நடப்பதால், தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப் படகு உடைந்து, கவிழ்ந்ததில் பலர் நீரில் மூழ்கினர். இச்சம்பவம் இன்று (23) காலை இடம்பெற்றுள்ளது.
இதில் பயணம் செய்த 20 மாணவர்களில் ஆறு பேர் உட்பட எழுவர் உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில் சம்பவ இடத்தில் அமைதி நிலையைப் பேணும் வகையில் வீதிகள் எங்கும் பெருமளவு இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இந்த விபத்தில் உயிரிழந்த ஆறு பேரின் விபரங்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, சகு சஹீ (மூன்றரை வயது), சஹிலா (6 வயது), பரீஸ் பகி (6 வயது), சப்ரியா (30 வயது), ஷேஹப்துல் சாகர், எவ்.சரீன் (8 வயது) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை 14 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதேவேளை, மீட்கப்பட்டவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கிண்ணியா படகு விபத்தின் பலி எண்ணிக்கை உயர்ந்ததைத் தொடர்ந்து கிண்ணியா மக்கள் வீதியில் டயர்களை எரித்துப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
#SrilankaNews
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: இலக்கத் தகடு அற்ற பேருந்து மோதியதில் மாணவி படுகாயம் (படங்கள்) - தமிழ்நாடி.com
Pingback: UPDATE: கிண்ணியா படகு விபத்து: உயிரிழப்பு அதிகரிப்பு - தமிழ்நாடி.com