மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு – சந்திவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட சித்தாண்டியில், இன்று (18) பேருந்துடன் முச்சக்கர வண்டி ஒன்று மோதியில் விபத்து சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பிலிருந்து வாழைச்சேனை நோக்கி பயணித்த பேருந்துடன் சந்தி வெளியிலிருந்து செங்கலடி நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியே இவ்வாறு மோதியுள்ளது.
முச்சகர வண்டியின் டயர் வெடித்ததன் காரணமாக குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை முச்சக்கர வண்டியின் சாரதி கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
#SrilankaNews
Leave a comment