நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய கால எல்லை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்று இந்த தகவலை வெளியிட்டார்.
இதன்படி தொடர்ச்சியாக 10 வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக (2 தடவைகள்) செயற்பட்டிருந்தால் மட்டுமே அந்த உறுப்பினர் ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதியுடையவர்.
இதுவரை 5 வருடங்கள் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தால் ஓய்வூதியம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி பதவி வகிப்பவருக்கும் இந்த நடைமுறை பொருந்தும் என நிதி அமைச்சர் அறிவித்தார் .
அத்துடன், அரச ஊழியர்களுக்கான எரிபொருள் மானியம் 5 வீதத்தாலும், தொலைபேசி கட்டணங்கள் 25 வீதத்தாலும் குறைக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டம் மீதான வாசிப்பை உடனுக்குடன் அறிந்துகொள்ள www.tamilnaadi.com
#SriLankaNews
Leave a comment