image
செய்திகள்உலகம்

யாருக்கு இலங்கை ? அமெரிக்கா VS சீனா

Share

சீனா குறித்து பென்டகன் முக்கிய அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன், கடந்த வியாழக்கிழமை சீனாவின் நடவடிக்கைள் குறித்த முக்கிய அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

இலங்கையில் சீனாவின் இராணுவத் தளம் ஒன்றை அமைப்பதற்கு சீனா பெரும் முயற்சி எடுப்பதாக அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

‘சீன மக்கள் குடியரசை உள்ளடக்கிய இராணுவம் மற்றும் பாதுகாப்பு அபிவிருத்திகள்’ என்ற தலைப்பில், வௌியிடப்பட்ட பென்டகன் அறிக்கையில், இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் சீன இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் முப்படைகளின் வீரத்தை மேன்படுத்தும் நோக்கில், இலங்கை உட்பட 13 நாடுகளில் இராணுவத்துக்கு வசதி வழங்கும் நிலையங்களை மாற்றுவதற்கு சீன அரசு எத்தனிக்கிறது .

அத்தோடு இலங்கையுடன் கம்போடியா, மியான்மார், தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேஷியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 13 நாடுகளிளும் தன்னுடைய இலக்கை அடைவதற்காக சீனா தந்திரோபாயங்களை பயன்படுத்துகிறதென அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஜோ பைடன் சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மிகநுணுக்கமாக முன்னெடுத்து வருகிறார்.

சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க, அமெரிக்கா மற்றும் ஜப்பான், அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற நடுகல் ஒன்றாக செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆனால், சீனா எவற்றையும் பொருட்படுத்தாமல் தன்னுடைய திட்டங்களை கொண்டு உலக பொருளாதாரத்தை தன்வசமாக்கும் முயற்சிகளை மேற்ற்கொண்டு வருகிறது.

பெரும் கடன்களை அள்ளி கொடுத்து பல சிறிய நாடுகளை தனக்குள் அடிபணிய செய்துள்ளது.

அதற்க்கு உதாரணமான இலங்கை சீனாவின் கடன்பொறிக்குள் விழுந்து ஹம்பாந்தோட்டை, கொழும்பு மற்றும் யாழ்பாண தீவுகள் பலவற்றை இழந்துள்ளது.

பங்களாதேஸின் சிட்டகொங் துறைமுகம் , இலங்கையில் கொழும்புதுறைமுகம், பாகிஸ்தானில் க்வாதர் துறைமுகம் என மூன்று முக்கிய துறைமுகங்கள் சீன தன்வசமாக்கியுள்ளது.

இதேபோன்று ஆபிரிக்காவையொட்டி அமைத்திருக்கும் ஜிபூட்டியில் பெரும் இராணுவத் தளத்தை சீனா அமைத்துக்கொண்டுள்ளது. இதன்மூலம் ஆபிரிக்கா, இந்துசமுத்திரம், தெற்காசியா ஆகிய மூன்று பகுதிகளின் கடல் ஆதிக்கத்தை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் சீன கொண்டுவந்துள்ளது.

இது போன்ற சீனாவின் தந்திரோபாய நகர்வுகளால் , இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் குறித்து, அமெரிக்கா மிகவும் எச்சரிக்கையாகவே உள்ளது என்றதையும் பெண்டகனின் அறிக்கையில் அமெரிக்க வெளிப்படுத்தியுள்ளது.

மொத்தத்தில் அமெரிக்காவினதும் சீனாவினதும் இலக்கு இலங்கை என்பது தெளிவாக தெரிகிறது.

இதை தடுக்குமா இலங்கை, இல்லை விட்டுக்கொடுக்கும் இலங்கை, என்பதுதான் தெரியவில்லை.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...