Iraqi
செய்திகள்உலகம்

வீட்டின் மீது விமான தாக்குதல்-மயிரிழையில் உயிர் தப்பிய பிரதமர்

Share

ஈராக் பிரதமர் வீட்டின் மீது ஆளில்லா விமானத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று அதிகாலை பாக்தாத்தில் உள்ள ஈராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமியின் வீட்டினை குறிவைத்து வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானம் நடத்திய கொலைமுயற்சியில் இருந்து அவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.

ஒரு ட்ரோன் பிரதமரின் வீட்டை குறிவைத்து தாக்க முயன்றது என்றும், இதனால் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்று அவரது அலுவலகம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான ஈராக் பிரதமரின் ட்வீட்டில், “துரோகத்தின் ராக்கெட்டுகள் விசுவாசிகளை சோர்வடைய செய்யாது” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், “மக்களை பாதுகாக்கவும், நீதியை நிலைநாட்டவும், சட்டத்தை அமல்படுத்தவும் உழைக்கும் நமது வீரமிக்க பாதுகாப்புப் படைகளின் உறுதியும், போராட்டமும் தளர்ந்துவிடாது என்றும் நான் நலமாக இருக்கிறேன்என்றும் கடவுளை போற்றுகிறேன் என்றும் ஈராக் நலனுக்காக அனைவரிடமிருந்தும் அமைதியாகவும் நிதானமாகவும் இருக்குமாறு மக்களை கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார் .

ஈராக்கின் அரசாங்க கட்டிடங்கள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள இப்பகுதியில் நடந்த தாக்குதலுக்கு, இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 3
இலங்கைசெய்திகள்

இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தேசிக்காயின் விலை

இலங்கையில் தேசிக்காயின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. இதன்படி, ஒரு கிலோ கிராம் தேசிக்காய்...

20 5
இலங்கைசெய்திகள்

விடுதலை புலிகளின் தலைவர் குறித்து சரத் பொன்சேகா புகழாரம்

போர்க் களத்தில் இருந்து தப்பியோடாமல், இறுதி வேட்டு வரை போராடி உயிர் நீத்தமைக்காக விடுதலைப்புலிகளின் தலைவர்...

19 6
இந்தியாசெய்திகள்

கரூர் விவகாரத்தில் புதிய திருப்பம்: உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

கரூரில் தவெக சார்பில் நடத்தப்பட்ட மக்கள் சந்திப்பில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...

18 7
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருந்திருந்தால் அவருக்கும் அமைச்சர் பதவி..!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால், மகிந்தவின் அரசில் அவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கும்...