நாள் ஒன்றுக்கு அரை மூடித் தேங்காயைப் பயன்படுத்துமாறு தென்னம் ஆராய்ச்சி சபையின் தலைவர் சாரங்க அலஹபெருமவினால் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இக் கருத்தினால், தற்போது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
சரியான முறையில் அரை மூடித் தேங்காயைப் பயன்படுத்தினால் அது சாத்தியம் என்றும், வீடுகளில் தேங்காய் பயன்பாடு நூற்றுக்கு 30 வீதமான அளவு விரயமாகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையில் வருடாந்த தேங்காய் அறுவடையில் 70 சதவீதம் உள்நாட்டுப் பாவனைக்காகவே பயன்படுத்தப்படுவதாகவும் தென்னம் ஆராய்ச்சி சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
கையால் தேங்காய் பால் பிளித்தால் 20-30 சதவீதம் தேங்காய்ப்பால் கிடைத்தாலும், உரலில் இடித்து அல்லது அம்மியில் அரைத்து பால் எடுத்தால் 50 சதவீத தேங்காப்பால் பெறலாம்.
தற்போதைய நாட்டின் நிலை அறிந்து மக்கள் பொறுப்புணர்ந்து செயற்படவேண்டுமெனவும் தெரிவித்தார்.
#SrilankaNews
Leave a comment