செய்திகள்
கிணற்றில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு!!

வட்டுக்கோட்டை – மூளாய் பகுதியைச் சேர்ந்த மாணவன் (பிரபாகரன் ரஜீவன் – வயது 18) ஒருவன் நேரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
பாடசாலையில் சிரமதானம் செய்வதற்கு நண்பர்களுடன் செல்வதாக கூறிவிட்டு சென்ற குறித்த மாணவன், சுழிபுரம் – திக்கரை பகுதியில் உள்ள கிணற்றில் நீந்துவதற்கு சென்றிருந்தார்.
நண்பர்களுடன் கிணற்றில் நீந்திக் கொண்டிருக்கும்போது திடீரென நீரில் மூழ்கியுள்ளார். அவர் கிணற்றில் மூழ்கியதை அவதானித்த அவரது நண்பர்கள், அயலில் உள்ளவர்களை அழைத்து அவரை காப்பாற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட மாணவன் மூளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலதிக சிகிச்சைக்காக குறித்த இளைஞனை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், வழியிலேயே உயிரிழந்தார்.
மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
You must be logged in to post a comment Login