இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை தற்போது அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி கடந்த ஒக்ரோபர் மாதம் 22 ஆயிரத்து 771 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்ரெம்பர் மாதத்தைக் காட்டிலும் 68 சதவீதம் அதிகரித்து காணப்படுகிறது என சபை குறிப்பிட்டுள்ளது.
கடந்த 10 மாதங்களில் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 60 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இந்தியாவிலிருந்தே அதகிளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு தந்துள்ளனர் தெரிவிக்கப்படுகிறது.
இது தவிர ஐக்கிய அரசு இராச்சியம், ஜேர்மனி, கஸகஸ்தான் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர் என அதிகார சபையால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#srilanka
Leave a comment