kopay
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கோப்பாய் வன்முறை! – மூவர் கைது

Share

கோப்பாய் பூதர்மடம் பகுதியில் உள்ள வீட்டினுள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த இருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த கும்பல் வாடகைக்கு அமர்த்திச் சென்ற ஓட்டோ சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை மாலை இச் சம்பவம் இடம்பெற்றது.

சம்பவத்தில் கதிர்காமநாதன் குணரட்ணசிங்கம் (வயது-58) படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கும் அவர்களது அயலில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனுக்கும் இடையில் கருத்து வேறுபாடுஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் அவர்களை பழிவாங்குவேன் என கூறிய குறித்த இளைஞன் வன்முறை கும்பலை வரவழைத்து வன்முறையில் ஈடுபடவைத்தார் என்று கோப்பாய் பொலிஸ் நிலையில் முறைப்பாடு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை கைதுசெய்துள்ளனர். கைது செய்யப்பட்டோர் நீர்வேலியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்கள் சென்ற ஓட்டோ சாரதியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய 9 பேர் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

https://tamilnaadi.com/news/local/2021/10/22/graduation-day-sword-team-attakasam/

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...