கம்பஹா, மீரிகம பகுதியில் இளம் தம்பதியினர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர். 26 வயதுடைய கணவன் மற்றும் 23 வயதுடைய மனைவி ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
தூக்கில் தொங்கிய பெண்ணின் கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்நிலையில், சடலம் மீட்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து கடிதம் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அதில் “குழந்தையை பார்த்துக் கொள்ளுங்கள் தம்பி”என எழுதியிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். உயிரிழந்த இருவரும் ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பெலாலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Leave a comment