goat scaled
செய்திகள்இலங்கை

ஆடு துஷ்பிரயோகம் – பிரான்ஸில் இலங்கையர் கைது!

Share

பிரான்சில் விலங்குகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக இலங்கை தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நபர் ஆடு ஒன்றினை மூன்று முறை பாலியல் துஷ்பிரயோகம்  செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 27ம் திகதி அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்த விசாரணைகளுக்கு டிசம்பர் 23ம் திகதி நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பிரான்ஸ் – டூரிஸ் on Île Honoré de Balzac தீவில் வளர்ப்பு ஆடுகளை குறித்த நபர்  துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரே ஆட்டினை குறித்த நபர் மூன்று முறை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும், குறித்த நபர் 2018ம் ஆண்டு முதல் இந்த குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அந்த ஆண்டின் முற்பகுதியில் இருந்து துஷ்பிரயோகம் செய்துள்ளமை உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, ஜனவரி 12 முதல் 13ம் திகதி வரையிலும், மார்ச் 21 முதல் 22ம் திகதி வரையிலும், ஜூன் 29 முதல் 30ம் திகதி வரையில் இரவு நேரங்களில் சந்தேகநபர் இந்த குற்றச்சாட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள குறித்த நபர், தியானம் அல்லது யோகசம் செய்வதற்கு குறித்த இடத்திற்கு வருவதை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், மது போதையில் இருந்தமையினால் ஆட்டினை துஷ்பிரயோகம் செய்தமை நினைவில் இல்லை என தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் எதிர்வரும் டிசம்பர் 23ம் திகதி நீதிமன்றில் இடம்பெறும் என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...