gas scaled
செய்திகள்இலங்கை

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரியுங்கள்! – அரசிடம் கோரிக்கை

Share

உள்நாட்டுச் சந்தையில் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 2021 ரூபாவாக விற்பனை செய்ய வேண்டும் என்ற போதிலும் இன்று 1493 ரூபாவுக்கே வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிட்டோ பாதுகாப்பு தேசிய ஒன்றியம் இதனை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 1200 ரூபாவினால் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க வேண்டும் என்றும் அதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் அந்த ஒன்றியம் கூறுகிறது.

சர்வதேச சந்தையில் ஒரு மெற்றிக் தொன் எரிவாயுவின் விலை 800 அமெரிக்க டொலர்வரை அதிகரித்திருப்பதாக அந்த ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

இதனை நேரடியாக 12.5 கிலோ கிராம் எரிவாயுடன் மாற்றும் போது 2021 ரூபாயாகும். எப்படியிருப்பினும் இன்று வரையில் 12.5 கிலோ கிராம் சிலின்டர் 1493 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

கப்பல் மற்றும் காப்பீடு உள்ளிட்ட பிற அத்தியாவசிய சேவைகளின் நேரடி செலவுகளின் தொகை 700 ரூபாயாகும். செலவை மாத்திரம் ஈடுசெய்ய ஒரு எரிவாயு சிலிண்டரை 2,800 ரூபாய்க்கு விற்க வேண்டும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விலை அதிகரிப்பு முழுமையாக இடம்பெறாவிடத்து விலை இடைவித்தியாசத்தை திறைசேரியே பெறுப்பேற்க நேரிடும் என அந்த ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 09 மாதங்களாக விலை அதிகரிக்கப்படாத காரணத்தினால் 10,500 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டதாகவும் லிட்டோ பாதுகாப்பு தேசிய ஒன்றியம் தெரிவிக்கின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...