நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட போதிலும் மக்களின் பொறுப்பான செயற்பாடுகளே அக்டோபர் மாதத்தின் நிலைமையைத் தீர்மானிக்கும் என இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் கோவிட் வைரஸ் பரவல் இன்னமும் முழுமையான கட்டுக்குள் வரவில்லை. பொருளாதார பிரச்சினைகளால் நாட்டைத் தொடர்ந்து மூடிவைக்க முடியாத நிலை ஏற்பட்டதாலேயே ஊரடங்கு சட்டத்தை நீக்கினோம்.
வைத்திய நிபுணர்களின் கூற்றின்படி மக்கள் பொறுப்பற்ற முறையில் செயற்பாட்டால் மீண்டும் கோவிட்டின் பேராபத்தை நாடு எதிர்கொண்டே தீரும்.மக்கள் நிலைமையைப் புரிந்துகொண்டு அவதானமிக்க முறையில் செயற்பட வேண்டும் என்றும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Leave a comment