1629371978 1618491646 court 2
செய்திகள்இலங்கை

மருதனார் மட வாள்வெட்டு- கைதானவர்களுக்கு விளக்கமறியல்

Share

யாழ்ப்பாணம் மருதனார் மடம் சந்தியில் கடந்த 1 ஆம் திகதி பழக்கடை வியாபாரி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதாகிய ஐவரையும் எதிர்வரும் 06 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 1 ஆம் திகதி மருதனார் மட சந்தியில் பழக்கடை நடாத்தும் 04 பிள்ளைகளின் தந்தை மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 3 வாள்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில் நேற்று (26) நீதிமன்றில் சந்தேகநபர்கள் ஆஜர்ப்படுத்தப்பநிலையில் எதிர்வரும் 06 திகதி வரையில் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையில் யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ள வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்கள் சிலவற்றை இலங்கையிலிருந்து தப்பி இந்தியாவுக்கு சென்ற சிலர் வழிநடத்துவதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...