தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார்.
பூரண குணமடைந்துள்ள இவர் இன்றைய தினம் (20) வீடு திரும்பியுள்ளார்.
செப்டெம்பர் 11ஆம் திகதி இவருக்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் வல்வெட்டித்துறை பிரதேச மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் இவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்தது கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரி தனிமைப்படுத்தல் முகாமில் 10 நாள்களாக சிகிச்சை பெற்ற இவர் இன்றைய தினம் பூரண குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளார்.
Leave a comment