யாழ். பல்கலை மருத்துவபீடத்தின் தொழில்நுட்பகூடம் திறந்துவைப்பு !
யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் தகவல் தொழிநுட்பகூடத்தின் திறப்பு விழா இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) நடைபெற்றுள்ளது.
ஐக்கிய அமெரிக்க பழைய மாணவர்களின் நிதி உதவியோடு மருத்துவபீடத்தின் பழைய மாணவர்களால் இந்த தொழில்நுட்பகூடம் திறக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி இ. சுரேந்திரகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தகவல் தொழிநுட்பகூடத்தை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா திறந்து வைத்தார்.
நிகழ்வில் முன்னாள் மருத்துவ பீடாதிபதியும் சத்திர சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் எஸ்.ரவிராஜ், மருத்துவ பீடத்தின் விரிவுரையாளர்கள், முன்னாள் மாணவர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர் .
Leave a comment