அரிசி மற்றும் சீனி என்பவற்றுக்கு அரசாங்கத்தால் நிர்ணய விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகிவண்ண தெரிவித்துள்ளார்.
அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கூடுதல் விலைக்கு பொருள்களை விற்பனை செய்வோருக்கான தண்டப்பணத்தை அதிகரிப்பதற்கான சட்ட திருத்தம் எதிர்வரும் செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அதற்கு அமைவாக கூடுதல் விலைக்கு பொருள்களை விற்போர் தொடர்பில் முதலாவது முறைப்பாடு கிடைக்கப்பெற்று உறுதிப்படுத்தப்பட்டால் அறவிடப்படும் தண்டப்பணத்தை 10 லட்சம் வரை அதிகரிப்பதற்கும், இரண்டாவது முறைப்பாடு கிடைக்கப்பெற்று உறுதிப்படுத்தப்பட்டால் அறவிடப்படும் தண்டப்பணத்தை 20 லட்சம் வரை அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகிவண்ண மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a comment