மேல் மாகாணத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 134 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு 8 மணி முதல் 11மணி வரை காலப்பகுதியில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அதிபர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை வீதி ஒழுங்கை விதிகளை மீறிய 334 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 26 பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment