Army personnel killed in ceasefire violation by Pakistan in SECVPF
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

Share

பாகிஸ்தான் – கைபர் பக்துன்வா மாகாணத்தில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானிய பாதுகாப்புப்படை வீரர்களாலேயே குறித்த பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் வடமேற்கு எல்லையில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் வஜிரிஸ்தான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப்படை வீரர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்தே இத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட பயங்கரவாதிகளில் நான்கு தளபதிகளும் உள்ளடங்குகின்றனர்.

இச் சம்பவத்தின் போது ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் முதலானவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கொல்லப்பட்ட அனைத்து பயங்கரவாதிகளும் வெடிபொருட்கள் தயாரிப்பு, துப்பாக்கிச்சூடு நடாத்துதல், சாதாரண மக்களை குறிவைத்து கொலை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டவர்களாவார்

மேலும் அவர்கள், வர்ஜிஸ்தான் மாவட்டத்தில் பயங்கரவாத செயலில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 11
உலகம்செய்திகள்

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின்னர் காஷ்மீரில் தாக்குதல்.. பாகிஸ்தான் மறுப்பு தெரிவிப்பு

இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக இந்தியா கூறியதை பாகிஸ்தான் அரசாங்கத்தின் உயர் அதிகாரி...

15 11
இலங்கைசெய்திகள்

வாக்களிப்பதைத் தவிர்த்து கொழும்பில் தங்கியிருந்த 10 லட்சம் வாக்காளர்கள்

கடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது வேறுபிரதேசங்களைச் சேர்ந்த சுமார் பத்து லட்சம் வாக்காளர்கள், வாக்களிப்பதைத்...

16 11
இலங்கைசெய்திகள்

இலங்கையை உலுக்கிய பயங்கர விபத்து – பலி எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு

றம்பொட பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் ஊடகம்...

14 11
இலங்கைசெய்திகள்

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபையின் அறிவிப்பு

மின்சார கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவை இலங்கை மின்சார சபை அடுத்த வாரம் பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம்...