1641781888872
செய்திகள்உலகம்

மலை கழன்று வீழ்ந்து 10 பேர் பலி!!

Share

பிரேசிலின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள மினாஸ் கெராய்ஸ் பகுதியில் மலை கழன்று வீழ்ந்ததில் 10 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக பிரேசில் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பிரேசில் உள்ள மினாஸ் கெராய்ஸ் பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ளுர் வெளியூர் சுற்றுலா பயணிகள் பலரும் படகில் சவாரி செய்து மகிழ்வது வழமை.

எதிர்பாராத தருணத்தில், உயர்ந்து வளர்ந்திருந்த மலை முகட்டில் இருந்து பாறைகள் உடைந்து விழுந்தன. திடீரென மலையின் ஒரு பாரிய கற்பகுதி கழன்று ஆற்றில் வீழ்ந்தது.

இந்நேரத்தில் மூன்று படகுகள் குறித்த அனர்த்தத்தில் சிக்கியது. குறித்த படகுகளில் பயணித்தவர்களில் 8 பேர் வரை உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் இருவரை காணவில்லை. 30க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இதில் ஒன்பது பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
#World

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Israel Iran
உலகம்

ஈரான் பணியும்வரை தாக்குதல் தொடரும் – அமெரிக்காவின் அதிரடி

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் சுதந்திரமான போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானின் திறனை மேலும் பலவீனப்படுத்துவதற்காக அமெரிக்க...

iran us
உலகம்

அமெரிக்காவின் 80 இற்கும் அதிகமான இலக்குகள் மீது ஈரான் தாக்குதல் – எண்ணெய் ஏற்றுமதி உரிமத்தினை ரத்து செய்த அமெரிக்கா!

அமெரிக்கா ஈரானின் இலக்குகள் மீது நேற்று பலமான வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்தது. ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக்...

zelan 5
உலகம்ஏனையவை

ஐரோப்பாவின் வான் கட்டமைப்பு – ஸெலென்ஸ்கி விடுத்துள்ள அவசர கோரிக்கை!

ஐரோப்பிய நாடுகள் தங்களின் சொந்த வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை உருவாக்கும் முயற்சிகள்...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...