ykUMVQD
செய்திகள்அரசியல்இலங்கை

போதிய தெளிவின்மையே போராட்டத்திற்கு காரணம் – ஜனாதிபதி கோட்டாபய

Share

நேற்றைய தினம் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது விவசாயிகள் போராட்டங்களை நடத்துவதற்கு பிரதான காரணம் அவர்களுக்கு போதிய தெளிவூட்டல்கள் இன்மையே என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

குறிப்பாக, விவசாயம் தொடர்பாக அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் சேதன விவசாயத்துக்கு மாத்திரமே எனவும், விவசாயிகளுக்கு போதிய தெளிவுபடுத்தாமை தொடர்பில் உரிய அதிகாரிகள் மீது அதிருப்தி அடைவதாகவும் கூறினார்.

அத்தோடு பசுமை விவசாயக் கொள்கையில் இருந்து கொண்டு தீர்வு பெறுதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு இணங்காத அதிகாரிகள் விலகி செல்வதற்கு எந்த தடையும் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

இதன்போது, மாவட்ட ரீதியில் பார்க்குமிடத்து 70 சதவீதமான பயிரிடல் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில், மனசாட்சியின்படி தெளிவாக வேலை செய்யக்கூடிய குழுவொன்றால் மாத்திரமே இவ் வேலைதிட்டத்தை மேற்கொள்ள முடியும் என்பதையும் வலியுறுத்தினார்.

#SrilankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் நியாயமானவை: அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் பிரையன் மாஸ்ட் உறுதி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா...

09 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மதுபோதையில் இருப்பவர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: 71% பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பற்ற உணர்வு!

மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள்...

08 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது? பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம்...

07 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

50,000 ரூபாய் லஞ்ச விவகாரம்: தெஹியத்தகண்டிய கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை!

பணியில் மீண்டும் இணைந்த ஒருவரின் நியமனக் காலத்தை நீடிப்பதற்காக 50,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்ற வழக்கில்,...