நேற்றைய தினம் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது விவசாயிகள் போராட்டங்களை நடத்துவதற்கு பிரதான காரணம் அவர்களுக்கு போதிய தெளிவூட்டல்கள் இன்மையே என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.
குறிப்பாக, விவசாயம் தொடர்பாக அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் சேதன விவசாயத்துக்கு மாத்திரமே எனவும், விவசாயிகளுக்கு போதிய தெளிவுபடுத்தாமை தொடர்பில் உரிய அதிகாரிகள் மீது அதிருப்தி அடைவதாகவும் கூறினார்.
அத்தோடு பசுமை விவசாயக் கொள்கையில் இருந்து கொண்டு தீர்வு பெறுதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு இணங்காத அதிகாரிகள் விலகி செல்வதற்கு எந்த தடையும் இல்லை எனவும் குறிப்பிட்டார்.
இதன்போது, மாவட்ட ரீதியில் பார்க்குமிடத்து 70 சதவீதமான பயிரிடல் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில், மனசாட்சியின்படி தெளிவாக வேலை செய்யக்கூடிய குழுவொன்றால் மாத்திரமே இவ் வேலைதிட்டத்தை மேற்கொள்ள முடியும் என்பதையும் வலியுறுத்தினார்.
#SrilankaNews
Leave a comment