articles2Fv9KiOKnKD5iVuoS2PJSS
செய்திகள்அரசியல்இலங்கை

புதிய அரசியலமைப்பு விவாதத்தை உடனே ஆரம்பியுங்கள் – அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் அழுத்தம்!

Share

புதிய அரசியலமைப்பை வரைவதற்கான தேசிய அளவிலான கலந்துரையாடலை அரசாங்கம் உடனடியாக ஆரம்பித்து, அதில் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும் எனப் பல அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

One Text Initiative அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்த விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் இதனைத் தெரிவித்தனர்.

அரசாங்கம் தனது கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்த போதிலும், புதிய அரசியலமைப்பு குறித்த விவாதங்களை வேண்டுமென்றே தவிர்த்து வருகிறது. ஜே.வி.பி அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்து தனது உண்மையான நிலைப்பாட்டை எப்போதும் மறைத்தே வந்துள்ளது” எனக் குறிப்பிட்டார்.

பெரும்பான்மைவாத அரசியல் அமைப்பில் சிறுபான்மையினரின் கருத்துக்களையும் உள்ளடக்கிய ஒரு அரசியலமைப்பை உருவாக்க அரசாங்கத்தின் பங்களிப்பு அவசியம். கடந்த தேர்தல்களில் வாக்குறுதி அளித்த போதிலும், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி தற்போது இதில் ஆர்வம் காட்டவில்லை எனத் தெரிவித்தார்.

வருங்கால சந்ததியினரின் நலனுக்காக ஒரு நிலையான அரசியலமைப்பு அவசியம். அதற்கு அரசாங்கத்தின் ஈடுபாடு மிக முக்கியமானது எனத் தெரிவித்தார்.

ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க புதிய அரசியலமைப்பு உதவ வேண்டும். அரசாங்கத்தின் பங்களிப்பு இன்றி அர்த்தமுள்ள சீர்திருத்தத்தை எட்ட முடியாது எனத் தெரிவித்தார்.

ஒற்றை அரசியல் கட்சியின் நலனுக்காக உருவாக்கப்படும் அரசியலமைப்பு ஒருபோதும் எவராலும் ஏற்றுக்கொள்ளப்படாது. சந்திரிகா, ரணில் மற்றும் கோட்டாபய ஆகியோரின் காலங்களில் தயாரிக்கப்பட்ட வரைவுகள் தோல்வியடைந்ததற்கு இதுவே காரணம். அரசாங்கத்தின் சித்தாந்தம் முழு நாட்டினதும் சித்தாந்தமாக இருக்க முடியாது” எனவும் குறிப்பிட்டார்.

 

 

Share
தொடர்புடையது
சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள்
இலங்கை

சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள்.

  இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஏழு ஆண்டுகளில் சுமார் 1,178 கைதிகள்...

இலங்கை வியட்நாம் விமான சேவை
இலங்கை

ஆரம்பமானது இலங்கை – வியட்நாம் விமான சேவைகள்!

வியட்நாமிற்கும், இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து, வியட்நாம் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான...

Veterinary Officer
இலங்கை

தொடரும் கால்நடை வைத்தியர்களின் தொடரும் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை!!

வனஜீவராசிகள் திணைக்கள கால்நடை வைத்தியர்கள் ஆரம்பித்துள்ள சட்டப்படி பணி செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, அவசர...

anura kumara 1
இலங்கை

பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் – ஜனாதிபதியின் அதிரடி முடிவு!

  நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர...