பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி!!
இலங்கைக்கு பாகிஸ்தானில் இருந்து 6,000 மெட்ரிக் தொன் அரிசியை உடனடியாக இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பான முன்மொழிவு வர்த்தக அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டது.
சந்தையில் அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக பாகிஸ்தான்-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் விதிகளின் கீழ் அரிசி இறக்குமதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment