articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

Share

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, அதிக விலைக்குப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை விற்பனை செய்தமை, மற்றும் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தாதமை போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட நுகர்வோர் சேவைகள் அதிகாரசபை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பை அடுத்தே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து நுவரெலியா நீதவான் புத்திக தர்மதாச முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது 100 ரூபாய் மதிப்புள்ள 1 லீற்றர் குடிநீர்ப் போத்தலை ரூ.140ற்கு விற்பனை செய்த நபருக்கு எதிராக ரூ500,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசியை விற்பனை செய்த 2 வர்த்தகர்களுக்கு தலா ரூபாய் 100,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...