நலம் விசாரிக்கச் சென்ற 25 பேருக்கு தொற்று! - தென்மராட்சியில் சம்பவம்
செய்திகள்இலங்கை

திருமணத்துக்காக இத்தாலியிலிருந்து வந்த இளைஞன் கொவிட்டால் சாவு!

Share

திருமணத்துக்காக இத்தாலியிலிருந்து வந்த இளைஞன் கொவிட்டால் சாவு!

திருமணத்துக்காக இத்தாலியில் இருந்து இலங்கை வந்த இளைஞர் ஒருவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

தங்கொட்டு வடக்கு, கோனவில, கிராகல பிரதேசத்தைச் சேர்ந்த இத்தாலியின் மொன்சோ நகரில் தொழில் செய்யும் 27 வயதான இந்த இளைஞனுக்கு இந்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதற்காக அவர் இத்தாலியில் இருந்து கடந்த மாதம் இலங்கை வந்தார்.

இலங்கைக்கு வந்த இளைஞனுக்குக் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது. அதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, இவரது தாயும் இரு வாரங்களுக்கு முன்னர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார் என்று சுகாதாரத் தரப்பினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாதம் திருமணம் நடக்கவிருந்த நிலையில் மகனும், தாயும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளமை அந்தப் பிரதேசத்தைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 87
செய்திகள்அரசியல்இலங்கை

மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கடி: சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்க உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர், 2010 முதல் 2015 வரையான காலப்பகுதியில்...

Untitled 86
செய்திகள்இலங்கை

தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரிப்பு: சர்வதேச சந்தையில் மாற்றம்!

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்களுக்கு...

Untitled 85
செய்திகள்உலகம்

அமெரிக்க விமானம் வீழ்த்தப்பட்டதாக ஈரான் அதிரடி அறிவிப்பு!

ஈரானின் ஈஸ்பஹான் (Isfahan) மாகாணத்திற்கு அருகே அமெரிக்காவின் C-130 ரக இராணுவ வானூர்தியைத் தங்கள் படைகள்...

Untitled 84
உலகம்செய்திகள்

ஆப்கானிஸ்தானில் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 77 பேர் பலி!

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் கடந்த பத்து நாட்களாகப் பெய்து வரும் கனமழை மற்றும் கடுமையான புயல்...