25 67bd5b790271f
செய்திகள்இலங்கை

சைபர் குற்றங்களைத் தடுக்க புதிய விசேட பொலிஸ் பிரிவு: அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவிப்பு!

Share

கணினி மற்றும் இணையம் சார்ந்த குற்றங்களை (Cyber Crimes) முறியடிப்பதற்காக விசேட பொலிஸ் பிரிவொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நாளொன்றுக்குச் சராசரியாக 23 முதல் 25 வரையிலான சைபர் குற்றங்கள் பதிவாகி வருகின்றன. இது முன்னரை விடப் பாரிய உயர்வு என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதிகரித்து வரும் இக்குற்றங்களை விசாரணை செய்வதற்குத் தற்போதைய பொலிஸ் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தி, புதிய தொழில்நுட்பம் மற்றும் விசேட அறிவு கொண்ட அதிகாரிகளைக் கொண்ட பிரிவாக இதனை உருவாக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொலிஸ் சேவையை மிகவும் வினைத்திறனான மற்றும் ஊழலற்ற திணைக்களமாக மாற்றுவதே தற்போதைய அரசாங்கத்தின் இலக்காகும்.

திறமையான அதிகாரிகளுக்கு உரிய அங்கீகாரம் மற்றும் பதவி உயர்வுகளை வழங்குவதற்கும், அதேநேரம் பொதுமக்களுக்குப் பாதகமாகத் தவறிழைக்கும் அதிகாரிகளைச் சேவையிலிருந்து நீக்குவதற்குமான முறையான பொறிமுறையொன்று தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று (06) பொல்பிட்டிய பொலிஸ் நிலையத்தைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...